Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெங்காய விற்பனையில் சாதனை

வெங்காய விற்பனையில் சாதனை
, சனி, 3 ஜனவரி 2009 (14:00 IST)
நாசிக்: லசால்கானில் அமைந்துள்ள சந்தையில் ஒரே நாளில் 46 ஆயிரத்து 500 குவின்டால் ( 1 குவின்டால் 100 கிலோ )வெங்காயம் விற்பனையாகி சாதனை நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகருக்கு அருகே லசால்கான் என்ற இடத்தில் ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தை அமைந்துள்ளது. இதை விவசாய விளை பொருட்கள் விற்பனை குழு பராமரிக்கிறது. மொத்த காய்கறி அங்காடியான இங்கு விவசாயிகள் கொண்டுவரும் காய்கறிகள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த சந்தையில் நேற்று ஒரே நாளில் 46 ஆயிரத்து 500 குவின்டால் வெங்காயம் விற்பனையானது. இந்த வெங்காயம் 1,602 லாரிகளில் கொண்டுவரப்பட்டன. வெங்காயம் அளவை பொருத்து விலை வேறுபடும். இதன் விலைகள் வெங்காயத்தின் அளவை பொருத்து நிர்ணயிக்கப்படுகின்றன. வெங்காயம் பெரிதாக இருந்தால் அதிக விலை கிடைக்கும். சிறிதாக இருந்தால் குறைந்த விலை கிடைக்கும்.

அத்துடன் வெங்காயத்தின் காரத்தன்மையை பொருத்தும் விலை வேறுபடும். வெங்காயம் பயிரிடப்படும் நிலத்தின் தன்மையை பொருத்து, அதன் கார தன்மை மாறுபடும்.

லசால்கானில் விற்பனை செய்ய்படும் வெங்காயம் உட்பட காய்கறிகள், இந்தியாவில் மட்டும் விற்பனை செய்யப்படுவதுடன் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. வெங்காயம் பல மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

நேற்று நடந்த ஏல விற்பனையில் பெரிய அளவு வெங்காயம் குவின்டால் ரூ.1,499 வரை விலை போனது. அதே போல் சிறிய ரக வெங்காயம் குவின்டால் ரூ. 983 க்கு விற்பனையானது.

இந்த சந்தை தொடங்கி 61 வருடங்கள் ஆகின்றன. இந்த 61 வருட வரலாற்றில், இதற்கு முன் இல்லாத அளவு ஒரே நாளில் 46,500 குவின்டால் வெங்காயம் விற்பனை ஆகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த சந்தையில் வழக்கமாக மாலை 5 மணி வரை மட்டுமே வியாபாரம் நடக்கும். நேற்று வெங்காய லாரிகள் வரிசையாக அணிவகுத்து நின்றதால், இரவு 7.30 மணி வரை வெங்காயம் ஏலம் விடப்பட்டது.

இதே போல் பிம்பால்கன் பஷ்வாந்த் என்ற இடத்தில் அமைந்துள்ள வெங்காய விற்பனை மையத்திலும், 33,280 குவின்டால் வெங்காயம் விற்பனையானது. இங்கு விலை சிறிய ரகத்திற்கு குவின்டால் ரூ.751 முதல் பெரிய ரகத்திற்கு ரூ. 1,451 வரை இருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil