ஜனவரி 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் 'கள்' இறக்க விவசாயிகள் முடிவு
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
ஜனவரி 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் 'கள்' இறக்கப்படும் என்று ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் சங்க பொறுப்பாளர் கூறினார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி மாயகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாய பிரதநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
அப்போது கீழ்பவானி விவசாயிகள் சங்க தலைவர் நல்லசாமி பேசுகையில், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். மேலும் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.
'கள்' என்பது மருந்து பொருள் பலவிதமான நோய்களுக்கு இது பயன்படுகிறது. ஆகவே 'கள்' இறக்கவும், குடிக்கவும் அரசு அனுமதி வழங்கவேண்டும். வரும் ஜனவரி மாதம் 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் 'கள்' இறக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.