கோவை : கேரள மாநிலம் ஆலப்புழை அருகே கலவூரில் உள்ள மத்திய கயிறு வாரிய பயிற்சி மையத்தில், வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் கயிறு தயாரிப்பு பயிற்சி நடைபெறவுள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் 18 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு 20 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்படும்.
கயிறு தொழில் நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் பரிந்துரை செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தொலைதூரத்தில் இருந்து வருவோருக்கு விடுதிக் கட்டண உதவித்தொகை ரூ.150 வழங்கப்படும்.
இது குறித்து கூடுதல் விவரம் அறிய உதவி இயக்குநர், கயிறு வாரியம், தேசிய கயிறு பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம், கலவூர், ஆலப்புழை, கேரளம் - 688622 என்ற முகவரியில் அறியலாம்.
கயிறு தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஜன.2 ஆம் தேதி கடைசிநாள் என்று கோவை மாவட்ட தொழில் மைய மேலாளர் ச.அசோகன் தெரிவித்துள்ளார்.