சிதம்பரம்: வெள்ளத்தால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கடலூர் (தெற்கு) மாவட்ட மாணவர் காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சிதம்பரத்தில் மாவட்ட மாணவர் காங்கிரஸ் அவசர செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாணவர் காங்கிரஸ் தலைவர் பி.கார்த்திக் தலைமை வகித்தார். நகரத் தலைவர் ஆபீத்உசேன் வரவேற்றார். மாநில சேவாதள காங்கிரஸ் தலைமை அமைப்பாளர் சரவணகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மணிலா, மரவள்ளிக்கிழங்கு, வெற்றிலை, கரும்பு, வாழை ஆகியவற்றிக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதிலாக தமிழக அரசு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.