Publish Date: Thu, 11 Dec 2008 (10:33 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:46 IST)
மழை வெள்ளத்தால் திருவாரூர், தஞ்சை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று மத்தியக்குழுவின் தலைவர் ஸ்கந்தன் கூறினார்.
திருவாரூர் மாவட்டத்தில் வெள்ள சேதத்தை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை வெள்ளத்தால் திருவாரூர் மாவட்டத்தில் மிகப்பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது உண்மை. பல இடங்களில் வெள்ள நிவாரண முகாம்களில் மக்கள் இன்னமும் தங்கியிருப்பதை பார்க்க முடிந்தது.
மழையால் பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு சென்றபோது, வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடு கட்டித்தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள நிவாரண உதவிகள் பாராட்டும்படி உள்ளது. திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் மழை வெள்ள காலங்களில் அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். அவர்களது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது என்றார்.