Publish Date: Thu, 04 Dec 2008 (10:37 IST)
Updated Date: Thu, 04 Dec 2008 (10:36 IST)
நாகப்பட்டினம் இந்த பருவ பயிர்க் காப்பீட்டு செய்து கொள்வதற்க்கான நாள் டிச.15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என, நாகை மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கைகளால், பயிர்க் காப்பீடு பிரிமியம் செலுத்துவதற்கான நாள் டிச.15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்து மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் புதன்கிழமை திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான அறிவுறுத்தல் நாகை மாவட்டத்தில் உள்ள வணிக மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். .
Webdunia
Publish Date: Thu, 04 Dec 2008 (10:37 IST)
Updated Date: Thu, 04 Dec 2008 (10:36 IST)