Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அணைகளில் உபரி நீர் திறப்பு

அணைகளில் உபரி நீர் திறப்பு
, சனி, 29 நவம்பர் 2008 (18:56 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகளிலும், பிற பகுதிகளிலும் வெள்ளிக்கிழமவரை மழை நீடித்தது.

இந்த மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக மழை பெய்தது.

வெள்ளிக் கிழமை மதியத்திற்கு பிறகே, வானம் தெளிவடைந்தது.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், கொட்டாரத்தில் 56.2 மி.மீ. மழை பதிவானது. .

பேச்சிப்பாறை-15.4 மி.மீ, பெருஞ்சாணி-12.2 மி.மீ, சிற்றாறு 1.1 மி.மீ, சிற்றாறு 2.2 மி.மீ, சுருளோடு-37.3 மி.மீ, பூதப்பாண்டி-20.6 மி.மீ, கன்னிமார்-3.2 மி.மீ, நாகர்கோவில்-39.1 மி.மீ, மயிலாடி-22.4 மி.மீ, ஆரல்வாய்மொழி-10.8 மி.மீ மழை பதிவானது. .

பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 571 கன அடி, பெருஞ்சாணி அணைக்கு 189 கன அடி, சிற்றாறு 1 அணைக்கு 37 கன அடி, சிற்றாறு 2 அணைக்கு 63 கன அடி நீர் வரத்து இருந்தது.

இங்குள்ள அணைகளினநீர்மட்டமஅபாஅளவைததாண்டியுள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீரவெளியேற்றப்பட்டுகிறது.

பேச்சிப்பாறஅணையிலிருந்தவினாடிக்கு 2 ஆயிரமஅடி, பெருஞ்சாணி அணையிலிருந்தவிநாடிக்கு 800 கஅடி உபரி நீரவெளியேற்றப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil