Publish Date: Sat, 29 Nov 2008 (18:59 IST)
Updated Date: Sat, 29 Nov 2008 (18:57 IST)
காவிரி பாசன பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் மேட்டூர் அணையில் இருந்து விவாசயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது 6 வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை கடந்த 24 ஆம் தேதி மூடப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 77.36 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 13,900 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
கல்லணையில் இருந்தும் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.