Publish Date: Mon, 17 Nov 2008 (11:51 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:00 IST)
திருச்சி: மேட்டூர் அணயின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 75.80 அடி.
இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 6,034 கன அடியாக இருந்தது. காவிரி பாசன பகுதிகளின் விவசாய பணிகளுக்காக அணையில் இருந்து விநாடிக்கு 15,993 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இது கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 6,901 கன அடி, வென்னாற்றில் விநாடிக்கு 2,316 கன அடி, கல்லணை கால்வாயில் விநாடிக்கு 2,513 கனஅடி, கொள்ளிடம் கால்வாயில் விநாடிக்கு 1,211 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.