Publish Date: Mon, 17 Nov 2008 (11:31 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:00 IST)
ஈரோடு: காளிங்கராயன் கால்வாய் ஆயக்கட்டு நிலப்பகுதிகளில் இரண்டாம் போகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து, காளிங்கராயன் கால்வாய் ஆயக்கட்டு பகுதிகளுக்கு 2008-09 ஆம் ஆண்டுக்கு, முதல்போக பாசனத்துக்காக கடந்த ஜூன் 16 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது நவ. 15 ஆம் தேதி வரை தண்ணீர் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரண்டாம் போக பாசனத்துக்காக நேற்று முதல் தண்ணீர் விடப்பட்டுள்ளது. இது மார்ச் 15 ஆம் தேதி வரை தொடர்ந்து தண்ணீர் விநியோகிக்கப்படும். மார்ச் 16 ஆம் தேதி முதல் வாய்க்காலில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் மகேசன்காசிராஜன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.