காஞ்சிபுரம்: மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். பாலாற்றில் பெரிய அணை கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் உண்ணைவிரதம் இருக்கின்றனர்.
மதுராந்தகம் சர்க்கரை ஆலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக கரும்பு அரவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். நீர் ஆதாரத்தா மேம்படுத்த பாலாற்றில் பெரிய அணை கட்ட வேண்டும் என பல முறை வலியுறுத்தியும் அரசு செவி சாய்க்கவில்லை.
எனவே, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அனைத்துக் கட்சிகள் சார்பில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே திங்கட் கிழமை போராட்டம் நடை பெறுகிறது என்று
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கச் செயலர் ஆர்.முரளி மோகன் தெரிவித்துள்ளார்.