நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.
இந்த மாவட்டத்தில் உள்ள அணைப்பகுதிகளிலும், மற்ற பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பெருஞ்சாணி அணைப் பகுதியில் மட்டும் 74.4. மி.மீ. பதிவாகியுள்ளது,.
கடந்த 10 ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி, முந்தைய 24 மணிநேரத்தில் பெருஞ்சாணி அணைப் பகுதியில் 74.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது
இதே போல் சிற்றாறு 1- 8 மி.மீ, சிற்றாறு 2- 6 மி.மீ, சுருளோடு- 24.5 மி.மீ, பூதப்பாண்டி- 18.4 மி.மீ, கன்னிமார்- 18.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 227 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 424 கன அடி, சிற்றாறு 1 அணைக்கு விநாடிக்கு 49 கன அடி, சிற்றாறு 2 அணைக்கு விநாடிக்கு 76 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்த பகுதியில் பாசனத்துக்காக பெருஞ்சாணி அணையிலிருந்து விநாடிக்கு 355 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.