Newsworld Finance Agriculture 0811 11 1081111079_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை!

Advertiesment
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை
10ஆம் தே‌தி‌யன்று வானிலை காணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தூத்துக்குடிக்கும் நாகைக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வலுவடையும் நிலையில் உள்ளது என்று மழைராஜ் கூறியுள்ளார்.

மேகங்களை அடிப்படையாக வைத்து மழை பற்றி ஆய்வு செய்து வரும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மழை ராஜ் அனு‌ப்‌பியு‌ள்ள ஆ‌ய்வு‌க் கு‌றி‌ப்‌பி‌ல் மே‌ற்க‌ண்டவாறு கூ‌றியு‌ள்ளா‌ர்.

அந்த ஆய்வின்படி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தூத்துக்குடிக்கும் நாகைக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வலுவடையும் நிலையில் உள்ளது.

இது மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளதால் ஓரிரு தினங்களில் நாகை, வேதாரண்யம், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் கன மழையும், கொடைக்கானல், மதுரை, திருச்சி, கரூர், சேலம் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த மழையும் பெற்ற வாய்ப்புள்ளது.

மேலும் நிலநடுக்க தேதி கணிப்பின்படி நவம்பர் மாத இறுதிக்குள் ஓரளவு சேதம் ஏற்படுத்தும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாய்ப்புள்ள தேதிகள் நவம்பர் மாதம் 13, 26 இவற்றிலிருந்து 3 நாட்கள் வித்தியாசத்திலும் ஏற்படலாம்.

Share this Story:

Follow Webdunia tamil