திருச்சி: மேட்டூர் அணயில் இருந்து, காவிரி பாசன பகுதிகளின் விவசாய பணிக்காக விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்த பகுதியில் மழை பெய்ததால், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தற்போது மழை நின்று விட்டது. இதனால் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்களுக்கு தண்ணீர் தேவை அதிகரித்து உள்ளது.
இதை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 12,001 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு 11,190 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
இன்று காலை அணையின் நீர் மட்டம் 88.42 அடியாக இருந்தது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.
கல்லணையில் இருந்து காவிரி ஆறு, வென்னாற்றில் விநாடிக்கு 51 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது இதே போல் கல்லணை கால்வாயில் விநாடிக்கு 701 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கொள்ளிடம் கால்வாயில் தண்ணீர் விடுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.