Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க மானியம்!

Advertiesment
கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க மானியம்!
, வியாழன், 30 அக்டோபர் 2008 (14:08 IST)
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் திறந்த வெளி பாசன கிணறுகள் மூலம் நிலநீரை செறிவூட்டும் திட்டத்திற்கு மானியக் கடன் உதவிகள் வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைந்துள்ள குழு மூலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் திருப்பனந்தாள், திருவிடைமருதூர், கும்பகோணம், அம்மாபேட்டை, திருவையாறு, மதுக்கூர், திருவோணம் ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

மத்திய அரசால் வடிதொட்டி கட்டுமானத்திற்காக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முழு மானியமாக ரூ. 4,000, பெரிய விவசாயிகளுக்கு ரூ.2,000 மானியமாக மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த மானியம் நபார்டு வங்கி மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக சேர்க்கப்படும்.

எனவே, திறந்த வெளி பாசனக் கிணறுகள் உள்ள நில உரிமையாளர்கள் தஞ்சாவூர் நிலநீர் கோட்ட செயல்பொறியாளர் அல்லது கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் பெற்று, தங்கள் கிணறு அமைந்துள்ள நிலத்தின் பட்டா, அடங்கல் மற்றும் வங்கி புத்தக முதல் பக்க நகல்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil