Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கரும்புக்கு டன்னுக்கு ரூ.2000 – விவசாயிகள் வலியுறுத்தல்!

கரும்புக்கு டன்னுக்கு ரூ.2000 – விவசாயிகள் வலியுறுத்தல்!
கோவை: கரும்புக்கு டன்னுக்கு ரூ.2 ஆயிகம் என விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) கோரியுள்ளது.

கரும்புக்கு டன்னுக்கு ரூ.1.050 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உற்பத்திச் செலவின் அடிப்படையில் டன்னுக்கு ரூ.2,000 கொடுத்தால் தான் கரும்பு விவசாயம் செய்வதற்கு கட்டுப்படியாகும்.

இதன் உற்பத்தி செலவுக்கு ஏற்ற விலை இல்லாததால், கடந்த ஆண்டு கரும்பு உற்பத்தி குறைந்தது. இதனால் சர்க்கரை விலை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு சர்க்கரை விலை மேலும் அதிகரிக்கும்.

சர்க்கரை உற்பத்தி, எத்தனால் தயாரிக்கும் திட்டம், மின்உற்பத்தி செய்யும் திட்டம் ஆகியவற்றுக்காக கரும்பு உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிப்பது அவசியம்.

இது கரும்பு விலையை டன்னுக்கு ரூ.2,000 என அறிவித்தால் மட்டுமே சாத்தியமாகும்.

எனவே, கரும்பு விலையை உயர்த்தி அறிவிக்க மத்திய அரசுக்கு, மாநில அரசு கோரிக்கை வைக்க வேண்டும். லாரி வாடகை, வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மாநில அளவிலான கரும்பு விவசாயிகள் மாநாடு நவம்பர் முதல்வாரத்தில் நடைபெறும் என தமிழக விவசாயிகள் சங்க (கட்சி சார்பற்றது) மாநிலத் தலைவர் எம்.ஆர்.சிவசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்நிலையில், கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்கவில்லை எனில், இனி கரும்பு பயிரிட மாட்டோம் பாரதீய கிசான் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த சங்கத்தின் வேலூர் மாவட்ட கூட்டம் அரக்கோணத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் தற்போது அறிவித்துள்ள கரும்பு விலை, சாகுபடி செலவு அளவிற்கு கூட வராது.

நெல்லுக்கும், கரும்புக்கும் ஒரே விலை அறிவித்துள்ளதை மாற்ற வேண்டும். மூன்று போக நெல் விவசாயத்திற்கும், ஓராண்டு கரும்பு விவசாயத்திற்கும் ஒரே விலை கொடுத்தால், இனி கரும்பு பயிரிடுவதை விவசாயிகள் மறந்து விட வேண்டிய நிலை தான் ஏற்படும். எனவே கரும்பு விலை மறுபரிசீலனை செய்வது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil