Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாழை உற்பத்தி கருத்தரங்கம்!

வாழை உற்பத்தி கருத்தரங்கம்!
திருச்சி: தரமான வாழை உற்பத்தி பற்றிய கருத்தரங்கம் திருச்சியில் நடைபெற உள்ளது இந்த கருத்தரங்கம் அக்டோபர் 24 ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெறுகின்றது.

இதை பன்னாட்டு தாவர மரபியல் வள நிறுவனம், வாழை மேம்பாட்டுக்கான பன்னாட்டு அமைப்பு, திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

இந்த கருத்தரங்கு பற்றி மைய இயக்குநர் எம்.எம். முஸ்தபா கூறுகையில், இந்த 3 அமைப்புகளும் இணைந்து திருச்சி பிரீஸ் ரெசிடென்சி ஹோட்டலில் அக். 20-ம் தேதி தாவர வகைப்பாட்டியல் ஆலோசனைக் குழுக் கூட்டத்தை தொடங்குகிறது.

இந்த கூட்டம் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும். இதில் 13 நாடுகளிலிருந்து 16 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

இதனிடையே, வாழை உற்பத்தி மற்றும் பயன்பாட்டு மேம்பாட்டுக்கான சங்கமும், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையமும் இணைந்து "உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைக்கான தரமான வாழை உற்பத்தி' என்ற பன்னாட்டுக் கருத்தரங்கத்தை அக்டோபர் 24 முதல் 26 வரை மூன்று நாட்கள் நடத்துகின்றன.

இந்தக் கருத்தரங்கை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தோட்டக்கலை இணை இயக்குநர் தொடக்கிவைக்கின்றார்.

இந்த கருத்தரங்கில் 30 நாடுகளிலிருந்து 40 பிரதிநிதிகளும், 300 வாழை ஆராய்ச்சியாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

இந்த கருத்தரங்கம் ஏற்றுமதித் தரத்தில் வாழை உற்பத்தி செய்வது தொடர்பாக கலந்துரையாட ஒரு வாய்ப்பாக அமையுமஎன்று முஸ்தபா தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil