நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நண்பகல் வரையில் இடைவிடாது பெய்தது.இதனால் பல இடங்களில் நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த மழையின் காரணமாக நெல் சாகுபடி செய்த வயல்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கொட்டாரத்தில் 41.6 மி.மீ. மழை பெய்தது.
இதே போல் பேச்சிப்பாறை அணை 13, பெருஞ்சாணி அணை 20.2, சிற்றாறு 1 அணை- 17, சிற்றாறு 2 அணை- 7, முக்கடல் அணை 24, சுருளோடு 23.2, பூதப்பாண்டி- 13.8, கன்னிமார் 28.5 நாகர்கோவில் 15.7, மயிலாடி 14.4, ஆரல்வாய்மொழி 26.4 மி. மீ பதிவாகியுள்ளதாக பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கனத்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நெல் சாகுபடி செய்த வயல்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளில் முற்றிய நெற்கதிர்கள் சாய்ந்துக் கிடக்கின்றன.