Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயற்கை வேளாண் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு!

இயற்கை வேளாண் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு!
, செவ்வாய், 14 அக்டோபர் 2008 (17:24 IST)
புது டெல்லி: இயற்கை முறையில் விவசாயம் செய்து, உற்பத்தி செய்த ரூ.328 கோடி மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

தற்போது அயல்நாடுகளில் நிதி நெருக்கடி ஏற்பட்டு இருந்தாலும், இதன் ஏற்றுமதிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இரசாயண உரம், பூச்சி மருந்து ஆகியவைகளை பயன்படுத்தாமல், இயற்கை உரம், பூச்சி மருந்துகள் பயன்படுத்தி விவசாயம் செய்யப்படுகிறது. இந்த இயற்கை வேளாண் முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு அதிக அளவு உள்நாட்டிலும், அயல் நாடுகளிலும் வர்த்தக வாய்ப்பு உள்ளது.

இத்துடன் அயல்நாடுகளில் இயற்கை வேளாண் முறையில் உற்பத்தி செய்த உணவுப் பொருட்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

மத்திய அரசு மதிப்பீட்டின் படி, 2007-08 ஆம் நிதி ஆண்டில் ரூ.328 கோடி மதிப்புள்ள இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன என்று இன்டர்நேஷனல் காம்பிடன்ஸ் பார் ஆர்கானிக் அக்ரிகல்சரல் [International Competence Centre for Organic Agriculture (ICCOA)] என்ற அமைப்பைச் சேர்ந்த மனோஜ் மேனன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் 2006-07 ஆம் நிதி ஆண்டில் ரூ.300 கோடி மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது.

இந்தியாவில் இருந்து இயற்கை வேளாண் முறையில் உற்பத்தி செய்த பருத்தி, தேயிலை, முந்திரி, அரிசி, தேன் உட்பட பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த வகை பொருட்கள் அதிக அளவு ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் இயற்கை வேளாண் முறையில் உற்பத்தி செய்யப்பட்டு பொருட்களை விற்பனை செய்வதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. உள்நாட்டில் ரூ,1,450 கோடி மதிப்புள்ள பொருட்கள் விற்பனை செய்ய முடியும் என்று கூறினார்.

மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணை செயலாளர் சஞ்சீவ் குப்தா கூறுகையில், இயற்கை வேளாண்மை முறையில் விவசாயம் செய்யும் பரப்பளவு 8.65 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.

இதற்கு முந்தைய வருடம் 5.38 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே இயற்கை முறையிலான விவசாயம் செய்யப்பட்டது.

தற்போது இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது என்ற சான்றிதழ் அளிக்கும் நிறுவனங்கள் குறைவாக உள்ளன. இதனால் சான்றிதழ் கொடுப்பதற்கு காலதாமதம் ஆகிறது. இந்த நிறுவனங்களை அதிகப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil