சென்னை: காவேரி பாசன பகுதி, மதுரை. திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி உட்பட பல பகுதிகளில் தேவையான அளவு மழை பெய்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி பாசன பகுதி மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகையில் பரவலாக மழை பெய்துள்ளது.
காவிரி டெல்டா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:
கொள்ளிடம் 38, தலைஞாயிறு 33.4, மயிலாடுதுறை 29, மணல்மேடு 26.2, பேராவூரணி 20.2, சீர்காழி 20, நாகை 17.2, பட்டுக்கோட்டை 13.4, முத்துப்பேட்டை 12.6, மன்னார்குடி 12.2, திருப்பூண்டி 12, திருத்துறைப்பூண்டி 11.4, திருவாரூர் 11.2, ஒரத்தநாடு 10.2, கீழணை 10.2, நன்னிலம் 10.1, முள்ளியார் 10,
கல்லணை 9.4, அயன்குடி 8.2, நாகுடி 6.2, பொறையார் 6, திருக்காட்டுப்பள்ளி 3.
நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதங்களாக கடுமையான வெயில் அடித்தது. இந்நிலையில் கடந்த 2 நாள்களாக மாவட்டத்தின் சில இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. சில பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது.
இந்த மழையால் குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் பெருகியது. இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழை அளவு: திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்):
திருநெல்வேலி-40.2, பாளையங்கோட்டை-50, அம்பாசமுத்திரம்-8, நான்குனேரி-19, தென்காசி-9.1, ஆய்க்குடி-5.1, ஆலங்குளம்-4.8, பாபநாசம்-8, சேர்வலாறு-6, கடனாநதி-14, மணிமுத்தாறு-6, ராமநதி-2, கருப்பாநதி-5, அடவிநயினார்-17.5, நம்பியாறு-2, கொடுமுடியாறு-10.
இதே போல் திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
இதனால் வத்தலகுண்டு பகுதியில் நெல், வாழை, தக்காளி விவசாயம் அமோகமாக நடைபெறுகிறது.
இப்பகுதியில் உள்ள வேடன்குளம், பெரிய கண்மாய், வீரன் குளம் போன்ற கண்மாய்களில் ஏற்கெனவே தண்ணீர் உள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக மழை பெய்வததைத் தொடர்ந்து, விவசாயிகள் விவசாய தொடங்கியுள்ளனர்.
இந்த வருடம் நெல் அதிக விலைக்கு விற்பனையாவதால், விவசாயிகள் ஆர்வத்துடன் நெல் நடவில் ஈடுபட்டுள்ளனர்.