தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியிலுள்ள சோத்துப்பாறை, மஞ்சளாறு ஆகிய இரு அணைகளில் இருந்தும், நாளை முதல் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதே போல் மஞ்சளாறு அணையின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
இந்த பகுதி பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் அக்.15-ம் தேதி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்.
இந்த வருடமும் அணையில் தேவையான அளவு தண்ணீர் இருப்பாதல், விவசாய பணிகளுக்காக தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி நாளை முதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.