கோபியில் ரூ.7 லட்சம் வாழைத்தார் ஏலத்தில் விற்பனை!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி!
Publish Date: Tue, 07 Oct 2008 (15:18 IST)
Updated Date: Tue, 07 Oct 2008 (15:18 IST)
கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 13 ஆயிரம் வாழைத்தார்கள் ரூ.7 லட்சத்திற்கு ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டது.ஈரோடு அருகே உள்ளது கோபிசெட்டிபாளையம். இங்குள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது.
இதில் கோபிசெட்டிபாளையம் சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த வாழைதார்களை ஏல விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் கதளி கிலோ ரூ.11.20 க்கும், நேந்திரம் கிலோ ரூ.7.50, பச்சை நாடன் தார் ஒன்று ரூ.140, மொந்தன் தார் ஒன்று ரூ.115, தேன்வாழை தார் ஒன்று ரூ.262, பூவன் தார் ஒன்று ரூ.265, ரஸ்தாளி தார் ஒன்று ரூ.260 க்கும் ஏலம்போனது.
கடந்த காலங்களை விட விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Webdunia
Publish Date: Tue, 07 Oct 2008 (15:18 IST)
Updated Date: Tue, 07 Oct 2008 (15:18 IST)