Publish Date: Wed, 01 Oct 2008 (17:30 IST)
Updated Date: Wed, 01 Oct 2008 (17:24 IST)
தஞ்சாவூர் : 2008-09 ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும் என்று குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை இந்த சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் எஸ். ராமநாதன் தலைமை வகித்தார்.
இதில் கரும்பு விலையை டன்னுக்கு ரூ.2,500 ஆக உயர்த்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில், பதிவு செய்யப்பட்ட கரும்புப் பயிர் தீ விபத்தால் பாதிக்கப்பட்டால், பாதிப்பு ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் எவ்வித தடையுமின்றி ஆலை நிர்வாகமே கரும்புகளை ஆலைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
அய்யம்பேட்டை, திருவையாறு கோட்டங்களை ஆலையின் பதிவு பரப்புக்கு உட்பட்டே செயல்படச் செய்ய வேண்டும்.
இப்பகுதியில் தனியார் ஆலைகள் கரும்பு எடுக்க அனுமதிக்க கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் பொதுச் செயலர் ஆர். திருப்பதி, சுவாமிமலை சுந்தரவிமல்நாதன், வீ. தருமராஜன் உள்ளிட்ட கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Webdunia
Publish Date: Wed, 01 Oct 2008 (17:30 IST)
Updated Date: Wed, 01 Oct 2008 (17:24 IST)