Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெல் விளைச்சல் அமோகம்!

நெல் விளைச்சல் அமோகம்!
, சனி, 27 செப்டம்பர் 2008 (19:20 IST)
இந்த கரிஃப் பருவத்தில் 832 லட்சம் டன் நெ‌ல் உற்பத்தியாகும் என்று மத்திய அரசு நம்பிக்கையுடன் உள்ளது.

கரிஃப் பருவத்தில் நெல் உட்பட எல்லா வகை உணவு தானியங்களும் 115.33 மில்லியன் டன் (1 மில்லியன்-10 லட்சம்) உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நெல் மட்டும் 83.25 மில்லியன் டன் உற்பத்தியிகும்.

இந்த வருடம் தென் மேற்கு பருவ மழை காலத்தில் ஜீலை மாதம் சில பகுதிகளில் வறட்சி காணப்பட்டது. அதே நேரத்தில் ஆகஸ்ட் மாதத்தில் அதிகளவு மழையும் இருந்தது. இதனால் பீகார், உத்தரபிரதேசம், ஒரிசா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பயிர்கள் சேதமாயின.

இந்நிலையிலும் கரிஃப் பருவத்தில் தானிய உற்பத்தி மனநிறைவு அளிப்பதாக இருக்கும்.

புது டெல்லியில் வியாழக்கிழமை ரபி பருவத்திற்கான உத்திகளை ஆலோசிப்பதற்காக தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது.

இதன் முடிவில் மத்திய விவசாய துறை செயலாளர் டி.நந்தகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இந்த பருவத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வறட்சி, வெள்ளம் காரணமாக 20 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்த பயிர்கள் அழிந்து இருக்கும் என மதிப்பிட்டுள்ளோம். மற்றொரு புறம் மாநில அரசுகளிடம் இருந்து வரும் தகவலின் படி, கரிப் பருவத்தில் தானிய உற்பத்தி அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்த (2008-09) கரிஃப் பருவத்தில் மொத்தம் 115.33 மில்லியன் டன் தானியம் உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த புள்ளி விபரம் முன் மதிப்பீடுதான். எல்லா பயிர்களின் அறுவடை முடிந்த பிறகே, இறுதி அளவு தெரியவரும் என்று கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சகம் மழையால் நாடு முழுவதும் 22 லட்சம் ஹெக்டேர் பாதிக்கப்பட்டள்ளதாக தெரிவி‌த்து‌ள்ளதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு நந்தகுமார் பதிலளிக்கையில், இதில் எல்லா இடத்திலும் பயிர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் என்று நினைக்க‌த் தேவையில்லை.

எங்கள் கணக்குபடி மொத்தம் 4.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பயிர்கள் மட்டுமே பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும். இதில் ‌‌பீகாரில் 2.5 லட்சம் ஹெக்டேர், அஸ்ஸாம், ஒரிசா மாநிலங்களில் தலா ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிரா, கர்நாடாகாவில் வறட்சி நிலவியதால் சிறு தானியங்கள், பருப்பு வகைகள் உற்பத்தி குறையும் என்று விவசாய அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.

அதே போல் இந்த வருடம் கரும்பு உற்பத்தியும் பாதிக்கப்படும். ஏனெனில் மகாராஷ்டிராவில் கரும்பு சாகுபடி செய்யும் பகுதிகளில் வறட்சி நிலவியது. அத்துடன் விவசாயிகள் கரும்புக்கு பதிலாக வேறு தானியங்களை விதைத்துள்ளனர்.

பருத்தி, எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியில் அதிக அளவு மாற்றம் இருக்காது. சென்ற வருட நிலையே இருக்கும். சோயா மொச்சை சாகுபடி செய்யும் பரப்பு அதிகரித்துள்ளது. இதன் விதைப்பு பணி, பருவத்தின் கடைசி நேரத்தில் நடந்தது. இதனால் உற்பத்தி குறையும் வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு பருவமழை காலத்தின் கடைசி மாதங்களில் மழை பெய்துள்ளது. இதனால் வயல்களில் ஈரப்பதம் அதிக அளவு இருக்கும். இது ரபி பருவத்தின் விதைப்புக்கு சிறந்தது. எனவே ரபி பருவத்தில் அதிக அளவு உணவு தானியங்களும், பணப்பயிர்களும் உற்பத்தியாவதற்கு வாய்ப்பு உண்டு என்று நந்த குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

கரிப் பருவத்தில் உற்பத்தி :

கரிப் பருவத்தில் உற்பத்தி
2008-09 (மில்லியன் டன்களில்-1 மில்லியன் 10 லட்சம்)
உணவு தானியம் மொத்தம்
115.33
நெல்
83.25
சிறு தானியங்கள் மொத்தம்
27.36
ஜோவர்
3.09
சோளம்
9.17
மக்காச் சோளம்
13.04
பருப்பு வகை
4.72
துவரம் பருப்பு
2.37
எண்ணெய் வித்துக்கள்
17.95
நிலக்கடலை
6.1
சோயா
9.94
கரும்பு
294.66
பருத்தி
23.91மில்லியன் பொதி (1 பொதி-170 கிலோ)
சணல் மற்றும் மஸ்தா
11.14 மில்லியன் பொதி (1பொதி-180 கிலோ)

Share this Story:

Follow Webdunia tamil