Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேசிய வேளாண் காப்பீட்டு- விவசாயிகளுக்கு அழைப்பு!

தேசிய வேளாண் காப்பீட்டு- விவசாயிகளுக்கு அழைப்பு!
, புதன், 24 செப்டம்பர் 2008 (16:30 IST)
ஆறுமுகனேரி: திருச்செந்தூர் வட்டாரத்தில் பிசானப் பருவத்தில் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என திருச்செந்தூர் வேளாண் உதவி இயக்குநர் கு.கிருஷ்ணபிள்ளை கேட்டுக்கொண்டுள்ளார்.

திருச்செந்தூர் வேளாண் வட்டாரத்தில் பிசான பருவ நெல் சாகுபடிக்கு தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு நெல் சாகுபடி விவசாயிகள் ரூபாய் 103 செலுத்தி பயிர் காப்பீடு செய்திட வேண்டும்.

தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து விதமான உணவுப்பயிர்கள் (தானியங்கள், பயறு வகைகள்) எண்ணெய் வித்துக்கள் மற்றும் வருடாந்திர வணிக தோட்டப் பயிர்களுக்கும் காப்பீடு செய்திடலாம்.

அனைத்து விதமான இயற்கை சீற்றங்களாலும், வெள்ளம், வறட்சி, பூச்சிகள் மற்றும் நோய்த் தாக்குதல் காரணமாகவும் ஏற்படும் மகசூல் இழப்புகளுக்கும் இத்திட்டத்தின் மூலம் காப்பீடு வழங்கப்படுகிறது.

குத்தகைதாரர்கள் உள்பட அனைத்து விவசாயிகள், வங்கிக் கடன் பெற்றவர்கள் மற்றும் வங்கிக்கடன் பெறாதவர்கள் என அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil