Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பட்டுக்கூடு விலை உயர்வு!

பட்டுக்கூடு விலை உயர்வு!
தமிழகத்தில் கூடுதலாக தானியங்கி பட்டு நூற்பாலைகள் தொடங்கப்பட்டுள்ளதால் பட்டுக்கூடு விலை அதிகரித்துள்ளது.

கோபி, பவானி மற்றும் தாராபுரம் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுகள் முன்பு கர்நாடாக மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு வந்தன.

தற்போது தமிழகத்தில் கூடுதலாக தானியங்கி பட்டு நூற்பாலைகளும், கோபிசெட்டிபாளையத்தில் பட்டுக்கூடு கொள்முதல் நிலையமும் தொடங்கப்பட்டுள்ளதால் பட்டுக்கூடுகளின் தேவை அதிகரித்துள்ளது.

தற்போது கோவை அங்காடியில் வெள்ளை பட்டுக்கூடு கிலோ ரூ.181 வரையும், மஞ்சள் வகை பட்டுக்கூடு கிலோ ரூ.140 வரை விற்பனையாகிறது.

ராம்நகர் அங்காடியில் வெள்ளை பட்டுக்கூடு கிலோ ரூ.210 வரையும், மஞ்சள் வகை பட்டுக்கூடு ரூ.165 வரையும் விற்பனையாகிறது.

தற்போது விலை உயர்வு தொடர்ந்து நீடித்து வருகிறது. இது டிசம்பர் மாதத்திற்கு பின்னர் வெள்ளை ரக பட்டுக்கூடுகள் கிலோ ரூ.170 வரை விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஈரோடு, பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் கோலப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil