ஈரோடு மாவட்டத்தில் நடவு பணி தீவிரம்!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி!
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நெற்பயிர் நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது பவானிசாகர் அணை. ஈரோடு மாவட்டம் பசுமையாக இருக்கு இந்த அணையே முக்கிய காரணமாகும். இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இதுதவிர பவானி ஆற்றின் மூலம் பிரிந்து செல்லும் தடப்பள்ளி, அரக்கண்கோட்டை வாய்க்கால் மூலம் சுமார் ஐம்பதாயிரம் ஏக்கர் விளைநிலங்களும், காளிங்கராயன் பாசன வாய்க்கால் மூலம் சுமார் முப்பதாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் பயன்பெறுகிறது.
கடந்த ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதையடுத்து ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பாசனப்பகுதியில் இருக்கும் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை சீர்செய்து தற்போது நெற்பயிர் நடவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உழவு பணிக்கு இயந்திரங்களை பயன்படுத்தினாலும் நடவு பணியில் கூலியாட்கள் ஈடுபட்டு வருகின்றனர்.