சத்தியமங்கலம் பகுதியில் தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்திற்கு அரசு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம், நுண்ணீர் பாசனத் திட்டம், தேசிய மூங்கில் இயக்கத் திட்டம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை சத்தியமங்கலம் பகுதியில் செயல்படுத்தபட உள்ளன.
இந்த திட்டங்கள் குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் பி.கணேசமூர்த்தி நேற்று கூறுகையில், தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.61.68 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மா, நெல்லி, கோகோ, வாழை, மலர்வகைப் பயிர்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுகிறது.
இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த மானியமும் வழங்கப்படுகிறது. இத்துடன் நீர்வள ஆதாரத்தை ஏற்படுத்த ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நுண்ணீர்ப் பாசன திட்டத்தின் கீழ் அனைத்து தோட்டக்கலைப் பயிர்களுக்கும் சொட்டுநீர்ப் பாசன வசதி பெற 50 விழுக்காடு மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.16.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூங்கில் இயக்கத்திட்டத்திற்கு மானியத்துடன் ரூ.1.03 லட்சம் நிதிஉதவி அளிக்கப்படுகிறது. 50 விழுக்காடு மானியத்துடன் காய்கறி விதைகள் வழங்கப்படுகிறது.
இத் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்தி தோட்டக்கலையை மேம்படுத்த வேண்டும் என்று கிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டார்.