கரீப் பருவத்திற்கு தானிய விலை அதிகரிப்பு!
, சனி, 20 செப்டம்பர் 2008 (10:24 IST)
மத்திய அரசு சமீபத்தில் கரீப் பருவத்திற்கு பல்வேறு தானியங்களின் குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்துள்ளது. இந்த கரீப் பருவத்தில் சிறு தானியங்களின் விலை 35 முதல் 52 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. நவதானியங்களின் விலையை 29 முதல் 48 விழுக்காடு வரை உயர்த்தியுள்ளது. இதே போல் எண்ணெய் வித்துக்களின் விலையை 35 முதல் 94 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. பருத்தி விலை ரகத்திற்கு தக்கவாறு 38 முதல் 47 விழுக்காடு வரை உயர்த்தியுள்ளது. ஏற்கனவே கோதுமை ஆதார விலை 33 விழுக்காடும், நெல் விலை 31 விழுக்காடு உயர்த்தப்பட்டது நினைவிருக்கலாம். உணவு தானியங்களை உற்பத்தி செய்ய தேவையான இடு பொருட்களான உரம், பூச்சி மருந்து. தொழிலாளர்கள் கூலி, டீசல் போன்றவை விலை அதிகரித்துள்ளது. இதனால் தானியங்களின் உற்பத்தி செலவும் உயர்ந்துள்ளது. விவசாயிகள் பல முறை வலியுறுத்தியது போல், கரீப் பருவத்திற்கு விவசாய விளை பொருட்களின் விலையை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இந்த கரீப் மத்திய அரசு அறிவித்துள்ள விலைகள் விபரம் வருமாறு.
| ரகம் | 2007-08 விலை | 2008-09 விலை |
| 2007-08 விலை | 2008-09 விலை | உயர்வு ரூ. |
|
பருத்தி | எப்-414/ஹெச்-777/ஜே34 |