Publish Date: Thu, 11 Sep 2008 (11:39 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)
மேட்டூர் அணை நீர் மட்டம்!
மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 94.93 அடியாக இருந்தது.
காவிரி பாசன பகுதிகளின் விவசாயத்திற்காக தொடர்ந்து காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையிலும் அணையின் நீர் மட்டம் குறையாமல் இருப்பதற்கு காரணம், அணைக்கு தண்ணீர் வரத்து குறையாமல் வந்து கொண்டு இருப்பதே.
இன்று அணைக்கு விநாடிக்கு 16,016 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 14,985 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 6,495 கன அடி, வென்னாற்றில் 1,813, கல்லணை கால்வாயில் 3,004, கொள்ளிடம் கால்வாயில் 1,126 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.