தமிழகத்திற்கு கூடுதலாக 5,000 மெட்ரிக் டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கோதுமை வழங்க செப்டம்பர் 2008 மாதத்திற்கு 3,783 மெட்ரிக் டன் வழக்கமான ஒதுக்கீடும் 2,500 மெட்ரிக் டன் கூடுதல் ஒதுக்கீடும் ஆக 8,283 மெட்ரிக் டன் கோதுமை பொது விநியோக திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது பொது மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் 2008 மாதத்திற்கு மேற்சொன்ன ஒதுக்கீடு தவிர மேலும் கூடுதலாக 5,000 மெட்ரிக் டன் கோதுமை பொது விநியோக திட்டத்திற்கு மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 11,283 மெட்ரிக் டன் கோதுமை செப்டம்பர் 2008 மாதத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனை குடும்ப அட்டைதாரர்கள், அவர்களுக்கு இணைக்கப்பட்டுள்ள நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கோதுமை பெறுவதில் குறைகள் இருப்பின் சென்னை துணை ஆணையர் (வடக்கு) அல்லது துணை ஆணையர் (தெற்கு), மாவட்ட வழங்கல் அலுவலர் அல்லது சம்பந்தப்பட்ட உதவி ஆணையரை, வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.