விவசாய பணிக்காக 14 மணி நேரம் இடைவிடாது மின்சாரம் வழங்க வேண்டும் என்று பாரதீய விவசாயிகள் சங்கம் [Bharatiya Kissan Sangh (BKS)] தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த சங்கத்தின் பொதுச் செயலர் அய்யாக்கண்ணு, விவசாயிகளுக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரி தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அதில், மின்சாரம் தடைபடுவதால் நீர் பாய்ச்ச முடியாமல் போகும். இதனால் வளர்ந்துள்ள நெற் பயிர்கள் வாடிப்போய்விடும். ஏற்கனவே பல காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்பால், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்ம் ரூ.7 ஆயிரம் வரை நஷ்டமாகும்.
தொழில் துறையை சேர்ந்த நிறுவனங்களை ஜெனரேட்டர் பயன்படுத்தி, அவர்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளுமாறு கூற வேண்டும். இதனால் சேமிக்கப்படும் மின்சாரத்தை விவசாய பணிகளுக்கு வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.