Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மே‌ட்டூ‌ர் அணை‌க்கு ‌நீ‌ர்வர‌த்து குறை‌ந்தது!

மே‌ட்டூ‌ர் அணை‌க்கு ‌நீ‌ர்வர‌த்து குறை‌ந்தது!
, திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (11:40 IST)
மே‌ட்டூ‌ர் அணை‌க்கு வரு‌ம் ‌நீ‌ர்வர‌த்து குறை‌ந்து வரு‌‌கிறது.

கர்நாடக பகுதியில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அங்கிருந்து மேட்டூருக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் குறைந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 82.41 அடியாக இருந்தது. நேற்று முன்தினம் 13,231 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 10,024 கனஅடியாக குறைந்தது. பாசனத்திற்காக நேற்று விநாடிக்கு 13,045 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

இ‌ன்று காலை அ‌ணை‌யி‌ன் ‌நீ‌ர்ம‌ட்ட‌ம் 82.310 அடியாக இரு‌ந்தது. அணை‌‌க்கு ‌வினாடி‌க்கு 10,958 கன அடி ‌நீ‌ர் வ‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறது. அணை‌யி‌‌ல் இரு‌ந்து 13,030 கனஅடி ‌நீ‌ர் ‌திற‌ந்து ‌விட‌ப்படு‌கிறது.

இவை கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 6,643 கன அடியு‌ம், வென்னாற்றில் இரு‌ந்து 1,515 கன அடியு‌ம், கல்லணை கால்வாயில் இரு‌‌ந்து 2,608 கனஅடியு‌ம், கொள்ளிடம் கால்வாயில் இரு‌ந்து 1,098 கன அடி வீதம் பிரித்து அனுப்பப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil