Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மரபணு விதைகள்: மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மரபணு விதைகள்: மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
, செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (17:20 IST)
மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயன்படுத்தி பயிர் செய்யும் சோதனைக்கு தடை விதிக்கும் வழக்கில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு தாக்கீது அனுப்ப உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

பருத்தி முதல் கத்தரிக்காய் வரை மரபணு மாற்றப்பட்ட விதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் தரம், விளைச்சல், நோய் தாக்குதலை தாங்கும் சக்தி ஆகியவைகளை கண்டறிய பல்வேறு இடங்களில் சோதனை அடிப்படையில் பயிரிடப்படுகின்றன.

இவ்வாறு செய்வதால் அந்த பகுதி நிலங்கள் பாதிக்கப்படுவாதகவும், இந்த விதைகளை பரிசோதனை அடிப்படையில் மற்ற பயிர்கள் சாகுபடி செய்யும் பகுதிகளில் பயிரிடக் கூடாது என்று விவசாயிகள், சுற்றுச் சூழல் காப்பாளர்கள் உட்பட பல்வேறு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சோதனையால் மனிதர்களின் உடல் நலம், விலங்கினங்கள், விவசாயம், சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது என்று கூறி அருணா ராட்ரிக்ஸ் என்பவர் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இதன் விசாரணை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பி.சதாசிவம், ஜே.எம்.பன்சால் ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரார் சார்பாக வழக்கஞர் பிரசாந்த பூஷன் வாதிடுகையில், இந்த நீதி மன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சோதனை பற்றிய விபரங்களை கொடுக்க மறுத்து வருகிறது. அரசு எந்த சார்பும் இல்லாத விஞ்ஞானிகள் சோதனையின் முடிவுகளை பற்றி ஆய்வு செய்வதை தடை செய்கிறது.

இந்நீதி மன்றமமரபணமாற்றப்பட்விதைகளபரிசோதிக்கும் குழு (Genetically Engineered Approval Committee) ஒப்புதல் அளித்த பிறகு தான் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவையும் மத்திய அரசு புறக்கணிக்கின்றது என்று கூறினார்.

மத்திய அரசின் சார்பில் நீதி மன்றத்தில் ஆஜரான அடிசனல் சொலிசிட்டர் ஜெனரல் கூறுகையில், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், அரசு புள்ளி விபரங்கள் உட்பட அனைத்து விபரங்களையும் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உச்சநீதி மன்றம் ஏப்ரல் 8ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என்றும், அது தொடர்பான அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யுமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.


Share this Story:

Follow Webdunia tamil