Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவசாயிகள் தற்கொலை: விசாரணை அறிக்கை தாக்கல்!

விவசாயிகள் தற்கொலை: விசாரணை அறிக்கை தாக்கல்!
, வியாழன், 31 ஜூலை 2008 (17:57 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்பா பகுதியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்களை பற்றி ஆய்வு செய்த பிரபல பொருளாதாக நிபுணர் நரேந்திரா ஜதாவ், தனது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவ மழை தவறியதாலும், பயிர்களின் பூச்சி தாக்குதலால் விவசாயிகள் பெருமளவு நஷ்டமடைந்தனர். குறிப்பாக பருத்தி விவசாயிகள் தனியார் கடன் நெருக்கடிக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டனர். விதர்பா பகுதி விவசாயிகளின் தினசரி தற்கொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த பகுதியில் விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் என்ன, இதற்கு தீர்வு காண என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி ஆய்வு செய்ய பிரபல பொருளாதார நிபுணரும், பூனா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான நரேந்திரா ஜதாவ்வை ஆய்வு செய்ய மகாராஷ்டிரா அரசு நியமித்தது.

இவர் தனது ஆய்வு அறிக்கையை நேற்று மகாராஷ்டிரா முதல்வர் விலாசரா தேஷ்முக், துணை முதல்வர் ஆர்.ஆர்.படீல் ஆகியோரிடம் வழங்கினார். இதில் உள்ள தகவல்களை வெளியிட மறுத்து விட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil