Publish Date: Mon, 28 Jul 2008 (16:45 IST)
Updated Date: Mon, 28 Jul 2008 (16:13 IST)
தமிழகத்தில் நேற்று உட்புறப் பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 16 செ.மீ. மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்ததாக வால்பாறையில் 10 செ.மீ மழை பெய்துள்ளது.
மற்ற இடங்களில் குறைந்த அளவே மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை, தென்காசி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, நீலகிரி மாவட்டம் கிட்டி, குந்தாபாலம் ஆகியவற்றில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை விமான நிலையம், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், மதுராந்தகம், கன்னியாகுமரி மாவட்டம் பூதபாண்டி, கன்னியாகுமரி, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் உட்புறப் பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.