Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈரோ‌ட்டி‌ல் சிறு அணைகளும் காய்ந்துபோகும் அபாயம்

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

ஈரோ‌ட்டி‌ல் சிறு அணைகளும் காய்ந்துபோகும் அபாயம்
, திங்கள், 14 ஜூலை 2008 (17:29 IST)
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் போதிய மழை இல்லாத காரணத்தால் சிறிய அணைகளும் வறண்டு காய்ந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மாவட்டம் ஆகும். இங்குள்ள மக்களின் பெரும்பான்மையினர் விவசாயம் மற்றும் விவசாயத்தை சார்ந்துள்ள தொழிலை செய்து வருகின்றனர். நெல், மஞ்சள் மற்றும் மல்லிகை பூ உற்பத்தியிலும், வாழை உள்ளிட்ட பொருட்களும் இம்மாவட்டத்தில் அதிகமாக உற்பத்தியாகிறது.

ிவசாயிகளுக்கு உதவியாக இருக்க கடந்த காலங்களில் இருந்த அரசு மலைப்பகுதிகளின் அடிவாரத்தில் பல்வேறு சிறிய அணைகள் கட்டியுள்ளது. மலைப்பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் இந்த அணைகளின் தேங்குவதன் மூலமாக விவசாயிகளின் கிணற்றின் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து விவசாயத்தை பெருக்க உதவியாக இருந்து வந்தது.

குறிப்பாக அந்தியூர் அருகே வறட்டுபள்ளம் அணை, கோபி அருகே குண்டேரிபள்ளம் அணை, சத்தியமங்கலம் அருகே பெரும்பள்ளம் அணை உள்ளிட்ட அணைகள் இப்பகுதியில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

webdunia photoWD
ஒவ்வொறு ஆண்டும் பருவ காலத்தில் மழை பெய்வதால் இந்த அணைகளின் தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கும். நடப்பு ஆண்டில் பருவமழை பொய்த்ததால் இந்த அணைகள் காய்ந்து வருகிறது. தற்போது இந்த அணைகளில் குட்டைபோல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

மண்ணை வளமாக்க விண்ணை நோக்கியுள்ள விவசாயிகளுக்கு வருண பகவான் கருணைகாட்டினால் மட்டுமே ஈரோடு மாவட்டத்தில் விவசாயம் வளமாகும் என்பதே தற்போதைய நிலையாகும்.

Share this Story:

Follow Webdunia tamil