நெல் கொள்முதலில் குவிண்டாலுக்கு ரூ.1000 ஆதார விலை வழங்குவதை உடனடியாக அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு காரீப் பருவத்திற்கு நெல் கொள்முதலின் போது உயர்ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.880ம், சாதாரண நெல் வகைக்கு ரூ.850ம் வழங்குவதற்கு, குறைந்தபட்ச ஆதார விலையாக மத்திய அரசு நிர்ணயித்தது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு, இந்த குறைந்தபட்ச ஆதார விலையுடன் கூடுதலாக கொள்முதல் விலையை நிர்ணயித்தது.
இதன்படி, உயர்ரக நெல் வகை குவிண்டாலுக்கு ரூ.1,500ம், சாதாரண வகை நெல்லுக்கு ரூ.1000ம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தொகையை இந்தாண்டு குறுவை பருவத்தில் இருந்து வழங்கப்படுமென உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவதை உடனே அமல்படுத்த மத்திய அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, தமிழக அரசும் இதை உடனே அமல்படுத்த உத்தரவு பிறப்பித்தது. இதன்படி உயர்ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,500ம், சாதாரண ரக நெல்லுக்கு ரூ.1000ம் கொள்முதலின்போது வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு உணவுத்துறை ஆணையர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.