Publish Date: Fri, 04 Jul 2008 (13:02 IST)
Updated Date: Fri, 04 Jul 2008 (13:02 IST)
பெட்ரோல், டீசலில் எத்தனால் தயாரிக்க மத்திய அரசு அனுமதிக்காததே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என்று பிரபல விவசாய சங்க தலைவர் சரத் ஜோஷி குற்றம் சாட்டினார்.
கோலாபூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சரத் ஜோஷி, மத்திய அரசு கரும்பு விவசாயிகள் எத்தனால் தயாரிக்கவும், அதன் விலையை நிர்ணயிக்கவும் அனுமதிக்க வேண்டும்.
இந்த பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக அவுரங்காபாத்தில் நவம்பர் மாதம் விவசாயிகள் சங்க மாநாடு நடத்தப்படும் என்று சரத் ஜோஷி தெரிவித்தார்.