Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈரோடு அருகே 12 டன் போலி விதைநெல் பறிமுதல்

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

ஈரோடு அருகே 12 டன் போலி விதைநெல் பறிமுதல்
, வெள்ளி, 6 ஜூன் 2008 (17:16 IST)
ஈரோட்டில் நெல் உற்பத்தி நிலையங்களில் அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் 12 டன் போலி விதை நெல் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 300 டன் நெல் விதைகள் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் தாராபுரம் பகுதியில் தனியார் நெல் விதை உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையங்களில் போலி விதை விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின்பேரில் ஈரோடு விதை ஆய்வு இணை இயக்குனர் கிருஷ்ணசாமி தலைமையில் தனிப்படையினர் தாராபுரம் பகுதியில் உள்ள விதை நெல் உற்பத்தி நிலையங்களில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

இதில் தஞ்சாவூரில் இருந்து கொண்டுவரப்பட்டதாக கணக்கு‌க்காட்டிய 12 டன் போலி விதை நெல் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் நவீன் 333 என்ற பெயருடைய வீரிய ஒட்டுநெல் என்று அச்சிடப்பட்டு போலியான பைகளில் மகாராஷ்டா மாநிலயத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது தெரியவந்தது.

ஒரு மாதத்தில் 40 டன் விதை நெல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இங்கிருந்த 800 அச்சிடப்பட்ட பைகளை பறிமுதல் செய்து மீதமுள்ள 300 டன் விதை நெல்லை ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இந்த விதை நெல் விற்பனை செய்ய தடைவிதித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil