Newsworld Finance Agriculture 0806 04 1080604032_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இ‌ந்த ஆ‌ண்டு கூடுத‌ல் மழை - மழைரா‌ஜ் கணி‌‌ப்பு!

Advertiesment
தென்மேற்குப் பருவ மழை மழைரா‌ஜ்
, புதன், 4 ஜூன் 2008 (16:37 IST)
தென்மேற்குப் பருவ மழை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக பெய்ய வாய்ப்புள்ளது என்று மேகங்களை ஆய்வு செய்து மழை, நிலநடுக்கம் போன்றவற்றை கணிக்கும் பெரம்பலூர் மழைராஜ் கூறியுள்ளார்!

தென் மேற்குப் பருவ மழை குறித்து மழைராஜ் கணித்துள்ள விவரம் வருமாறு:

வரும் ஜூன் மாதம் 5ஆம் தேதி முதல் நெல்லை உள்ளிட்ட தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் பெய்யத் துவங்கும் மழையானது, 7ஆம் தேதி முதல் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

மேலும், ஜூன் மாதம் 13-லிருந்து 15 ஆம் தேதியும், 18 முதல் 21 ஆம் தேதி வரையும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே தேதிகளில் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் மாதம் இறுதியிலும் மழைக்கான வாய்ப்புள்ளது.

ஜூலை 1ஆம் முதல் 4ஆம் தேதி வரை பலத்த மழை வாய்ப்புள்ள தேதியாகும். ஜூலை மாதம் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரங்களின் பெரும்பாலான நாட்கள் தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களில் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாலும், தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உள்ளதாலும், அணையின் நீர் மட்டத்தை குறைத்து வைப்பதன் மூலம் அளவுக்கதிகமான வெள்ளம் வெளியேற்றுவதை தவிர்த்து சீராக வெளியேற்றி வெள்ள அபாயத்தை தடுக்க முடியும்.

ஜூன் மாதம் 10, 17, 29 ஆகிய தேதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil