Publish Date: Mon, 02 Jun 2008 (19:17 IST)
Updated Date: Mon, 02 Jun 2008 (19:17 IST)
கடந்த சனிக்கிழமை கேரளத்தில் பொழியத் துவங்கிய தென் மேற்குப் பருவ மழை, காவிரி நதி உற்பத்தியாகும் தென் கன்னட பகுதியில் தீவிரமடைந்து வருவதாக பூனா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு, வடக்கு கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகள், ராயலசீமா, வங்கத்தின் வடபகுதி, நாகாலாந்து, மிஜோரம், திரிபுரா, அஸ்ஸாம், மேகாலயா, அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது.
தமிழ்நாட்டிலும், அந்தமான் நிக்கோபாரிலும், லட்சத் தீவுகளிலும் ஆங்காங்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று பூனா வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென் கர்நாடகத்தில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைவதால் காவிரியில் எதிர்பார்த்த அளவிற்கு நீர் வரத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.