Newsworld Finance Agriculture 0805 31 1080531039_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே மரத்தில் 300 வகையான மாம்பழம்!

Advertiesment
300 வகையான மாம்பழம் ம‌‌லிகாபா‌‌த் உத்தர பிரதேச‌ம்
, திங்கள், 9 ஜூன் 2008 (13:14 IST)
ஒரே மரத்தில் ருசியான முன்னூறு வகை மாம்பழம் கா‌ய்‌க்கின்றது என்றால் ஆச்சரியமாக இருக்கின்றதா?

நீங்கள் நம்பாவிட்டால், உடனே உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மலிகாபாத் என்று நகருக்கு புறப்படுங்கள்.

webdunia photoFILE
தமிழகத்தில் மாம்பழத்திற்கு கிருஷ்ணகிரி எப்படி புகழ் பெற்றதோ, அதுபோல் உத்தரபிரதேசத்தில் மலிகாபாத் மாம்பழத்திற்கு பெயர் பெற்ற நகரம். இஙகு பல ஆண்டுகளாக பல ரக மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மலிகாபாத் மாம்பழம் என்ற பெயரை கேட்டாலே, மாம்பழ பிரியர்களுக்கு தானாகவே அந்த மாம்பழத்தின் ருசி நினைவுக்கு வந்துவிடும்.

பல ஆண்டுகளாக சில வகை மாழ்பழங்களின் விளைச்சல் இல்லாமல் போய் விட்டது. பல ரக மாம்பழங்களின் பெயர் கூட மறந்துவிட்டது.

இவற்றை மலிகாபாத்தை சேர்ந்த கலிமுல்லா கான் பாதுகாத்து, வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

இவர் தனது மாம்பழ தோட்டத்தில் உள்ள மாமரத்தில் ஒட்டு - பதியம் முறையில் பல ரக செடிகளை வளர்த்து வருகிறார். இந்த தாய் மரத்திற்கு 80 வயது. இதில் கலிமுல்லா கான் சிறு வயது முதலே பலவகை மா பதியங்களை ஒட்ட வைத்து மரமாக வளர்த்து வருகிறார். இந்த மரத்தில்தான் 300 வகையான மாம்பழங்கள் காய்த்து உள்ளன.

ஒரே மரத்தில் பலவகையான மாம்பழங்கள் வளரும் அதிசயத்தை தினமும் பலர் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்.

இதை பார்த்த மகிழ்ச்சியில் பண்டிட் ராமேஷ்வர் தயாள் கூறுகையில், எனது 70 வருட வாழ்க்கையில் முதல் தடவையாக இது மாதிரியான ஆச்சரியத்தை பார்க்கின்றேன் என்று கூறினார்.

webdunia
webdunia photoWD
உத்தர பிரதேசத்தில் மாம்பழம் விளையும் பகுதிகளில் மலிகாபாத் அமைந்துள்ளது. இங்குள்ள மக்களில் 90 விழுக்காடு பேரின் தொழில் மாம்பழ தோட்டத்தை பராமரிப்பதுதான். இங்கு விளையும் மாம்பழம் நாட்டின் பல பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புவதுடன், அந்நிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் 2.5 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் மாம்பழ தோட்டங்கள் அமைந்துள்ளன. இங்கு ஆயிரம் ரக மாம்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, அஸ்ஸாம், ஒரிசா, பிகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவு மாம்பழம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

உலக அளவில் மொத்த மாம்பழம் உற்பத்தியில், இந்தியாவின் பங்கு 59 விழுக்காடு.

ஆயினும் உலக அளவில் நடக்கும் மாம்பழ வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 15 விழுக்காடுதான்.

இந்தியாவில் இருந்து பிரிட்டன், குவைத், சவுதி அரேபியா, கனடா, அமெரிக்கா உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மாம்பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவின் மொத்த மாம்பழ ஏறறுமதியில் இந்த நாடுகளின் பங்கு 39 விழுக்காடாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil