Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தென்மேற்கு பருவமழை தாமதமாகும்!

தென்மேற்கு பருவமழை தாமதமாகும்!
, வெள்ளி, 30 மே 2008 (16:18 IST)
தென்மேற்கு பருவமழை தாமதமாக பெய்ய துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை வழக்கமாக கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி தொடங்கும். இது வழக்கத்தைவிட ஒரு வாரம் முன்னதாக தொடங்கும் என்று கடந்த வாரம், பூனாவில் உள்ள மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது வழக்கத்தைவிட தாமதமாக துவங்கும் என்று அறிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக அரபிக் கடல் பகுதியில் லட்சத் தீவு பகுதிகளுக்கு தென் கிழக்கு பகுதியில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிய பிறகு, ஒன்பது நாட்கள் கழித்து கேரளாவில் மழை பெய்ய துவங்கும். இங்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்படுவதற்கான அறிகுறி தென்படவில்லை.

இதனால் தென்மேற்கு பருவமழை தாமதமாகும் என்று தெரிகிறது.

தற்போது அரபிக் கடலில் மத்திய மேற்கு பகுதியில் மழை மேகங்கள் உருவாகியுள்ளது. இந்த பகுதியில் மணிக்கு 28 கி.மீட்டர் வேகத்தில் காற்று அடித்துக் கொண்டுள்ளது. இந்த காற்றினால் மழை மேகங்கள் வடக்கு நோக்கி நகரும் போதுதான் பருவமழை தொடங்கும்.

வடமேற்கு பகுதியில் வானிலை வறட்சியாக இருக்கின்றது. இதனால் வானில் மேல் மட்டத்தில் உள்ள மேகங்கள், இநதிய தீப கற்பத்தை நோக்கி நகர்வதற்கு காலதாமதமாகும்.

இத்துடன் மாலத்தீவு மேற்கு பகுதியில் மழை மேகம் உருவாகியிருந்தது. இது வடக்கு நோக்கி நகரும் போது, கேரளாவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த மழை மேகமும் கலைந்து விட்டதால், மழை ஆரம்பிக்கும் நம்பிக்கையும் கலைந்து விட்டது.

திருவனந்தபுரத்தில் நேற்று காற்றில் உள்ள ஈரப்பதம் வழக்கமாக இருககும் அளவைவிட பாதி அளவுதான் இருந்தது. இதில் இருந்து மழை மேகம் உருவாகும் வாய்ப்பு குறைவாக இருப்பது தெளிவாக தெரிகின்றது.

ஆனால் கர்நாடகாவின் கடற்கரை பகுதிகளில், மங்களுர் போன்ற இடங்களில் காற்றின் ஈரப்பதம் 70 முதல் 80 விழுக்காடு வரை இருந்தது. இதனால் அந்த பகுதியில் சில இடங்களில் மழை பெய்தது.

வானிலை ஆய்வு மைய தகவலின்படி, அரபிக் கடல் பகுதியில் தென் மேற்கு பருவ காற்று ஜூன் 2ஆம் தேதி முதல துவங்கும் என்று தெரிகிறது. இந்த சமயத்தில் கேரளாவில் மழை பருவ மழை ஆரம்பிக்கும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் வானின் மேற்கு பகுதியில் உருவாகும் காற்று, சென்னை நகரின் பகுதியிலும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதன் கிழக்கு-மேற்கு பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானில் ஆய்வு மையம் கணித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil