Publish Date: Thu, 29 May 2008 (10:51 IST)
Updated Date: Thu, 29 May 2008 (10:51 IST)
காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூர் அணையில் இந்த ஆண்டு 100 அடிக்கு மேல் நீர் இருப்பு இப்போதே இருப்பதால் ஜூன் மாதம் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
இது குறித்து விவசாயத்திற்கு தேவையான விவசாய கடன், விதை, உரம் போன்றவைகளை உரிய நேரத்தில் அவர்களுக்கு வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளிடமிருந்து பல்வேறு முறையீடுகள் வந்த பிறகே மேட்டூர் அணை திறக்கப்படும் என்பதற்கு மாறாக இந்த ஆண்டு வேண்டுகோள் வருவதற்கு முன்பே மேட்டூர் அணை திறக்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் விவசாயிகளுக்கு தெரிவிக்கின்றேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.