Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 4 March 2025
webdunia

மக்காச் சோளம், சோயா முன்பேர வர்த்தகத்திற்கு தடை கோரிக்கை!

Advertiesment
மக்காச் சோளம், சோயா முன்பேர வர்த்தகத்திற்கு தடை கோரிக்கை!
, புதன், 28 மே 2008 (19:28 IST)
சோயா, மக்காச் சோளம் ஆகியவைகளுக்கு முன்பேர வர்த்தகத்தில் தடை விதிக்க வேண்டும் என்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவில் இந்தியாவில் உள்ள கோழிப் பண்ணை உரிமையாளர்கள உறுப்பினர்களாக உள்ளனர். இது வணிக நோக்கத்தில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழி இறைச்சி, முட்டை விலைகளின் அன்றாட விலைகளை நிர்ணயிக்கும் அமைப்பாக உள்ளது.

அத்துடன் கோழிப் பண்ணை தொழில் சந்தித்து வரும் பிரச்சனைகளை பற்றியும் அவ்வப்போது மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கிறது.

இ‌வ்வமை‌ப்பு மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முன்பேர வர்த்தகம் மேல் நாட்டினருக்கு சரியானது. இந்தியா போன்ற நாடுக‌ளி‌ல், பெரும்பாலான விவசாயிகள் முன்பேர வர்த்தகத்தினால் பலன் அடையும் வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளது.

கோழிப் பண்ணைக‌ளி‌ல் உணவுப் பொருளாக பயன்படும் மக்காச் சோளம், சோயா ஆ‌கியவ‌‌ற்‌றி‌ன் விலை முன்பேர வர்த்தகத்தால் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா போன்ற நாடுக‌ளி‌ல் உள்ள விவசாயிகளுக்கு, முன்பேர வர்த்தகம் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் அந்நாட்டு விவசாயிகள் அதிக அளவு நிலம் வைத்துள்ளனர். அதனால் அவர்கள் உற்பத்தியான தா‌னியங்களையும் இருப்பில் வைத்து விற்பனை செய்ய முடியும்.

இதற்கு நேர் மாறாக இந்தியாவில் உள்ள விவசாயிகளின் நிலை உள்ளது. இங்கு சிறு மற்றும் குறு விவசாயிகளே சோயா, மக்காச் சோளம் பயிரிடுகின்றனர். இவர்களால் விளைந்த தா‌னியங்களை இருப்பில் வைத்து, சில மாதங்கள் கழித்து விற்பனை செய்ய முடியாது. அறுவடை நேரத்தில் விற்பனை செய்து விடுவார்கள்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வியாபாரிகள் குறைந்த விலையில் வாங்குகின்றனர். அதை இருப்பில் வைத்துக் கொண்டு, வியாபாரிகள் முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்டு விலை உயர்த்துகின்றனர்.

இரண்டு வருடங்களில் சோயா, மக்காச் சோளத்தின் விலை அதிக அளவு உயர்ந்து விட்டது. இதனால் கோழிப் பண்ணை வைத்துள்ள விவசாயிகள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்காச் சோளத்தின் விலை இரண்டு வருடங்களுக்கு முன் குவின்டால் (100 கி.கி.) ரூ.500-525 என்ற அளவில் இருந்தது. இன்று இதன் விலை ரூ900 ஆக அதிகரித்து விட்டது. சில இடங்களில் ஆயிரம் ரூபாய்க்கும் கூட விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் சோயா புண்ணாக்கு விலை இரு மடங்காக அதிகரித்துவிட்டது. ஒரு டன் ரூ.7,000-8,000 என்ற அளவில் இருந்தது. தற்பொழுது ரூ.19 ஆயிரமாக அதிகரித்துவிட்டது.

சென்ற வருடம் 140 லட்சம் டன் மக்காச் சோளம் உற்பத்தியானது. இந்த வருடம் 168 லட்சம் டன் உற்பத்தியாகியுள்ளது. உற்பத்தி அதிகரித்தும் விலைகள் உயர்ந்துள்ளதற்கு காரணம், முன்பேர வர்த்தகத்தில் நடக்கும் ஊக வணிகமே.

இவ்வாறு கோழி தீவனங்கள் தயாரிக்கும் பொருட்களின் விலை உயர்வால், கோழி முட்டையின் உற்பத்தி செலவு கடந்த ஒரு வருடத்தில் 90 பைசாவில் இருந்து ரூ.1.80 என இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இதே போல் பிராய்லர் கோழியின் உற்பத்தி செலவு 1 கிலோ ரூ.27இல் இருந்து ரூ.40 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கோழிப் பண்ணை வைத்திருப்பவர்கள் தொடர்ந்து நஷ்டம் அடைந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மாற்றம் ஏற்படாவிட்டால், 50 விழுக்காடு கோழிப் பண்ணைகள் மூடப்பட்டுவிடும் என்று மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு எச்சரித்துள்ளது.

அத்துடன் மக்காச் சோளம், சோயா புண்ணாக்கு ஏற்றுமதி செய்வதையும் முறைப்படுத்த வேணடும். இதை அரசு சார்பு நிறுவனங்கள் மூலமாக மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil