Publish Date: Sat, 24 May 2008 (11:01 IST)
Updated Date: Sat, 24 May 2008 (11:01 IST)
ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசுக்குப் பரிந்துரை அனுப்பியிருப்பதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் விஜயராஜ் குமார் கூறினார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்திற்குத் தலைமை வகித்து அவர் பேசுகையில், மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 99.84 அடி. ஜூன் 12ஆம் தேதி நீர் இருப்பு 65 டிஎம்சி ஆக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஜூன் 12ஆம் தேதி அணையைத் திறக்க வாய்ப்புள்ளதால், அரசுக்குப் பரிந்துரை அனுப்பியுள்ளோம்.
வேலையில்லா இளைஞர்கள் வேளாண் ஆலோசனை மையம் மற்றும் சிறிய மண் பரிசோதனை நிலையம் அமைக்க 50 விழுக்காடு மானிய உதவியுடன் ரூ.6 லட்சம் கடன் உதவி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று ஆட்சித் தலைவர் விஜயகுமார் கூறினார்.