Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவசாய விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம்!

விவசாய விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம்!
, புதன், 14 மே 2008 (16:09 IST)
விவசாயிகள் உற்பத்தி செய்யும நெல், கோதுமை உட்பட பணப்பயிரின் உண்மையான உற்பத்தி செலவு புதிய முறையில் கணக்கிடப்பட உள்ளது.

“விவசாய விளை பொருட்கள் உற்பத்தி செலவு மற்றும் விலை நிர்ணய குழு” என்ற அமைப்பு, விவசாயிகள் விளை பொருட்களின் உற்பத்தி செலவகணக்கிடுகிறது. இதன் அடிப்படையில் நெல், கோதமை, கரும்பு போன்றவற்றை, விவசாயிகளிடம் இருந்து என்ன விலையில் கொள்முதல் செய்யலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்கிறது.

இதன் அடிப்படையில் மத்திய அரசவிவசாயிகளிடம் இருந்து வாங்கும் உணவு தா‌னியங்களின் கொள்முதல் விலையை அறிவிக்கிறது.

உணவு தா‌னியங்கள், கரும்பு போன்ற பண‌ப் பயிர்களின் உற்பத்தி செலவுக்கும், அரசு அறிவிக்கும் விலைக்கும் அதிக வேறுபாடு உள்ளது.

விவசாய விளை பொருட்கள் உற்பத்தி செலவு மற்றும் விலை நிர்ணய குழு, கணக்கிடும் முறையில் தவறு உள்ளது, இது உற்பத்தி செலவை கணக்கிடும் முறை யதார்ததமாக இல்லை.

இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகின்றது என்று பல்வேறு விவசாயிகள் சங்கம், விவசாயதுறை நிபுணர்கள் புகார் கூறியுள்ளனர்.

“விவசாய விளை பொருட்கள் உற்பத்தி செலவு மற்றும் விலை நிர்ணய குழுவின் தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள பேராசிரியர் மகேந்திர தேவ் கருத்து தெரிவிக்கையில்,

விளைபொருட்களுக்கு ஆகும் செலவை கணக்கிடும் முறைக்கும், யதார்த்த நிலைக்கும் அதிக அளவு வேறுபாடு இருந்தால், விவசாய அமைச்சகம் உட்பட சம்பந்தப்பட்ட துறைகளிடம், அவர்கள் தகவல் பெறும் முறையை மாற்றுமாறு கேட்டுக் கொள்வோம் என்று தெரிவித்தார்.

இதற்காக புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கணக்கிடும் முறையில், உண்மையாக ஆகும் செலவு, யதார்த்தமான முறையில் கணக்கிடப்படும் என்று கூறினார்.

“விவசாய விளை பொருட்கள் உற்பத்தி செலவு மற்றும் விலை நிர்ணய குழு, மத்திய அரசுக்கு 25 விதமான விவசாய விளை பொருட்களின், உற்பத்தி செலவு பற்றி பரிந்துரைக்கிறது. இதன் அடிப்படையில் மத்திய அரசு கொள்முதல் விலையை நிர்ணயிக்கிறது.

இந்த அமைப்புக்கு தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள பேராசிரியர் மகேந்திர தேவ், ஹைதராபாத்தில் உள்ள பொருளாதாரம் மற்றும் சமூக விஞ்ஞான மையத்தின் இயக்குநராக இருந்தவர்.

இவர் மேலும் கூறுகையில், நாடு முழுவதும் ஒரே மாதிரி கணக்கிட முடியாது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். 16 மாநிலங்களில் இருந்து பெறும் விபரங்களின் அடிப்படையில், பொதுவான முடிவை எடுக்கும். ஒவ்வொரு பகுதியிலும் உற்பத்தி செலவு வேறுபடும். வேலை செய்பவர்களின் கூலி, இதர இடுபொருட்களின் விலை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றது. இதை மாநில அரசுகள் தான் கணக்கெடுத்து கொடுக்க வேண்டும்.

இத்துடன் இனி விலையை பரிந்துரைப்பதற்கு முன்பு, மற்ற நாட்டில் நிலவும் சூழ்நிலைகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். உலகமயமாக்கல் சூழ்நிலையில், உள்நாட்டில் உள்ள சூழ்நிலைகள் மட்டும் விளைபொருட்களின் விலையை நிர்ணயிக்க போதுமனதல்ல. மற்ற நாட்டில் உள்ள விலைகளும், உள்நாட்டு விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று பேராசிரியர் மகேந்திர தேவ் கூறினார்.

( சென்ற வருடம் மத்திய அரசு வெளிநாடுளில் இருந்து இறக்குமதி செய்த கோதுமைக்கு, உள்நாட்டு விவசாயிகளுக்கு கொடுக்கும் விலையை விட, இரண்டு மடங்கு விலை கொடுத்து இறக்குமதி செய்தது).

விவசாய விளை பொருட்கள் உற்பத்தி செலவு மற்றும் விலை நிர்ணய குழு, கரும்புக்கு நிர்ணயிக்க வேண்டிய விலை பற்றி ஆகஸ்ட் மாதத்திலும், ரபி பருவத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான விலை பற்றிய பரிந்துரையை ஜூலை மாதத்தில் பரிந்துரைக்க வேண்டியதுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil