மத்திய அரசு இந்த பருவத்தில் 180 லட்சம் டன் கோதுமையை கொள்முத்ல செய்துள்ளது.
மத்திய அரசின் சார்பில் இந்திய உணவு கழகம், மாநில நுகர்பொருள் வாணிப கழகஙகள் விவசாயிகளிடம் இருந்து கோதுமையை கொள்முதல் செய்கின்றன.
இந்த வருடம் மே 8 ந் தேதி நிலவரப்படி 180 லட்சத்து பத்தாயிரம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பருவத்தில் 196 லட்சம் டன் உற்பத்தியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இதுவரை 92 விழுக்காடு கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உணவு அமைச்சகத்தின் கீழ் உள்ள உணவு மற்றும் பொது விநியோக துறை தெரிவித்துள்ளது.
சென்ற வருடம் இதே காலகட்டத்தில் மத்திய அரசு சார்பாக 90 லட்சத்து 6 ஆயிரம் டன் கோதுமை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இந்த பருவத்தில் இரண்டு மடங்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற ஆண்டு தனியார் நிறுவனங்கள் அதிக அளவு கோதுமையை கொள்முதல் செய்தன. இந்த வருடம் தனியார் நிறுவனவ்ங்கள் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு கடுமையான கட்டுப்பாட்தை விதித்துள்ளது. இதனால் தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யவில்லை. இதனால் விவசாயிகள் அரசின் நிறுவனத்திடம் விற்பனை செய்தனர்.
இதுவரை பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 93 லட்சத்து 90 ஆயிரம், ஹரியானா 50 லட்சத்து 4 ஆயிரம், உத்தர பிரதேசம் 13 லட்சத்து 40 ஆயிரம், மத்திய பிரதேசம் 12 லட்சத்து 6 ஆயிரம், ராஜஸ்தான் 7 லட்சம், குஜராத் 1 லட்சத்து 70 ஆயிரம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இத்துடன் பீகார், உத்தரகாண்ட், சண்டீகர், டெல்லி ஆகிய மாநிலங்களிலும் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு சென்ற வருடம் கோதுமை கொள்முதல் செய்ய தவறியால், மத்திய அரசின் தொகுப்பில் இருப்பு வைக்கும் கோதுமையின் அளவு குறைந்தது. பற்ற்காகுறையை ஈடுகட்ட அயல்நாடுகளில் இருந்து அதிக விலையில் கோதுமை இறக்கமதி செய்தது.
மத்திய அரசு பொதுவிநியோகம், வேலைக்கு உணவு திட்டம் போன்ற திட்டங்களுக்கு, கோதுமை, அரிசி போன்ற உணவு தாணியங்களை வழங்குகிறது.