Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூ‌ட்டுறவு வ‌ங்‌கிகளு‌க்கு ரூ.3,304 கோடி இழ‌ப்‌பீடு!

கூ‌ட்டுறவு வ‌ங்‌கிகளு‌க்கு ரூ.3,304 கோடி இழ‌ப்‌பீடு!
, வியாழன், 20 மார்ச் 2008 (16:45 IST)
நமதமா‌நில‌த்‌தி‌லகூ‌ட்டுறவு‌ககட‌ன்க‌ளர‌த்தசெ‌ய்ய‌ப்ப‌ட்டத‌ற்காகூ‌ட்டுறவு ‌நிறுவன‌ங்களு‌க்ககட‌ந்இர‌ண்டஆ‌ண்டுக‌ளி‌லூ.3,304 கோடி இழ‌ப்‌பீடவழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றத‌மிழஅரசதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்தச‌ட்ட‌பபேரவை‌யி‌லதா‌க்க‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்ப‌ட்ஜெ‌ட்டி‌ல், "நமது மாநிலத்தில் சுமார் ரூ. 7,000 கோடி கூட்டுறவுக் கடன்கள் இரத்து செ‌ய்யப்பட்டதற்காக, கூட்டுறவு நிறுவனங்களுக்கு கடந்த இரண்டாண்டுகளில் மாநில அரசால் இதுவரை ரூ.3,304 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. வரும் 2008-2009 ஆம் நிதியாண்டிலும், கூட்டுறவு நிறுவனங்களுக்கு இந்த வகையில் மேலும் ரூ.1,150 கோடி ஒதுக்கீடு செ‌ள்யப்பட்டுள்ளது" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌ம், இந்த நடவடிக்கைகளினால், 2006-2007 ஆம் ஆண்டில் ரூ.1,250 கோடியும், 2007-2008 ஆம் ஆண்டில் இதுவரை மேலும் ரூ. 1,177 கோடியும் புதிய பயிர்க் கடன்களாக வழங்கப்பட்டுள்ளதாகவு‌ம், 2008-2009 ஆம் ஆண்டி‌ல் ரூ.1,500 கோடி புதிய பயிர்க் கடன் வழ‌ங்கப்படும் எ‌ன்று அரசு கூ‌றியு‌ள்ளது.

வேளாண் கடன்களுக்கான வட்டி வீதத்தை 2006-2007 ஆம் ஆண்டில் 9 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக் குறைத்து, அதனைக் கடந்த நிதிநிலை அறிக்கையில் 5 சதவீதமாக மேலும் குறைத்து வழங்கி வருவதாகவு‌ம் இது வரும் நிதியாண்டிலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்படும் எ‌ன்று‌ம் அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil